திமுக அலுவலகத்தில் புகுந்து ரகளை- மாஜி போலீஸ்காரர் கைது..!

கோவை ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் தி.மு.க கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வமணி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட ரத்தினபுரி பெரியசாமி லேஅவுட் சேர்ந்த வினோத்குமார் (வயது 45) என்பவரை கைது செய்தார். இவர் காவல் துறையில் பணியாற்றிய போது பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டு இவர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.