பணம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் 6-பேர் கைது!

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி பகுதிக்கு மாடுகளை வாங்கிக்கொண்டு, பிக்கப் வேனில் வந்த மாட்டு வியாபாரிகளிடம்,நிருபர்கள் என குறி ஒரு கும்பல் நிறுத்தியுள்ளது.அளவுக்கு அதிகமாக மாடுகளை வாகனத்தில் கொண்டு செல்வது சட்ட விரோதம் என அவர்களை பயமுறுத்தி, 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு உள்ளனர்.இதனை பார்த்த அங்கிருந்த  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒன்று கூடி அவர்களைப் பிடித்து, கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.அவர்கள் கர்நாடக மாநிலம் கோலார், கே ஜி எஃப்,  திருப்பத்தூர், போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.அந்த 6 நபர்களையும் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.