கோவை நீதிமன்றத்தில் போலி இன்சூரன்ஸ் ஆவணங்கள் தாக்கல் – பெண் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை சரவணம்பட்டி அருகே கடந்த மே மாதம் 15-ந்தேதி நடந்த விபத்தில் லாரி மோதி இளங்கோ என்பவர் இறந்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது . அப்போது அந்த லாரியின் உரிமையாளர் தரப்பில் இருந்து இன்சுரன்ஸ் ஆவணங்கள் தாக்கல் செயல்பட்டன. விசாரணையில் அந்த இன்சூரன்ஸ் ஆவணங்களை போலியாக தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்து மேற்படி மோசடி செய்தது தெரிய வந்தது. இதற்கு காரணமாக இருந்த பாஸ்கர், முனியசாமி, நித்யா ஆகியோர் மீது கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..