தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.. இளைய தலைமுறைக்கு டிஜிபி சைலேந்திர பாபு அன்பு வேண்டுகோள்..!

1987ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு தனது 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர் கடந்த ஆண்டு ஜூன் 30 அன்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக பொறுப்பேற்றார். இவர் சென்னையில் இருந்து சைக்கிளில் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சென்று, அங்கு மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

அதன்பின் அங்கிருந்து திருமழிசை, மணவாளநகர் வழியாக மீண்டும் சென்னையை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் இளைய தலைமுறையினர் தினமும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார். மேலும் தினமும் காலை ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்து தான், அதன் பின் அலுவலகம் சென்று 12 மணி நேரம் கடுமையாக உழைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.