தமிழக பண்பாட்டிற்கு எதிராக எவர் புறப்பட்டாலும் எதிர்ப்பு தெரிவிக்க ஒவ்வொரு பாஜக தொண்டரும் தயார்-அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை..!

சென்னை: தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டிற்கு எதிராக எவர் புறப்பட்டாலும் எதிர்ப்பை தெரிவிக்க ஒவ்வொரு பாஜ தொண்டனும் தயாராக இருக்கின்றனர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்த நாட்டுக்காக போராடி வீர மரணம் எய்தி இருக்கிறார் லக்ஷ்மணன். அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. இதில் மலிவான அரசியல் செய்தவர் யார் என்பதை தமிழ்நாடறியும். அமைச்சரின் காரின் மீது, செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை நான் நியாயப்படுத்தவும் இல்லை. அதை ஆதரிக்கவுமில்லை.

அடக்குமுறையைக் கண்டு நாங்கள் யாரும் அஞ்சப்போவதில்லை. நாட்டின் இறையாண்மைக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிராக எவர் புறப்பட்டாலும், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க, பாஜவின் ஒவ்வொரு தொண்டனும் தயாராக இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவர் பின்னாலும், நானும், என் மூத்த தலைவர்களும் இருக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.