கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சரவண சுந்தர் தலைமையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் வைத்தனர்.
இந்த விழாவில் காவல்துறையினரின் குடும்பத்தினரும், குழந்தைகளும் உற்சாகமாக கலந்து கொண்டனர். குழந்தைகளுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சரவண சுந்தர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
இந்த சமத்துவ பொங்கல் விழா, காவல்துறையினரிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாக மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகளில் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கோவை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா.!!







