புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சிவநாதன். இவரது மகன் சஞ்சய் நாதன் (வயது 23) இவர் சூலூர் பக்கம் உள்ள நீலாம்பூரில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை – அவிநாசி ரோட்டில் நீலம்பூர் அருகே ரோட்டை கடந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சஞ்சய நாதன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்க்காமல் சென்ற 4 சக்கர வாகனத்தை தேடி வருகிறார்கள்..
4 சக்கர வாகனம் மோதி என்ஜினியர் பரிதாப பலி..

		
				        






