139பாட்டில் பறிமுதல் . கோவை 7 கோவை பி.என்.புதூர் – மருதமலை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில்( எண் 2207)கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பாரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைசேர்ந்த பார் ஊழியர் லட்சுமணன் ( வபது 23) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 139 மது பாட்டில்களும் மது விற்ற பணம் ரூ. 3,860 பறிமுதல் செய்யப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
டாஸ்மாக் பாரில் நள்ளிரவில் மது விற்ற ஊழியர் கைது.
