கோவை ,சென்னை சாலைகளில் மின் சாதன வாகனங்கள் பயன் படுத்த வேண்டும் என பொது மக்கள் கருத்து கேட்பில் கோரிக்கை விடுத்தனர் , உலக மின்வாகன தினமாக அனுசரிக்கப்படும் நாளையொட்டி , செப் 9ம் தேதி காற்று மாசுபாடு குறித்து சி எம் எஸ் ஆர் நிறுவனம் இணைய வழி கருத்தரங்கு திங்கட்கிழமை வரை நடத்தியது, இதில் நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய உணவு பொருட்களை விநியோக மையத்தில் இருந்து வாடிக்கையாளரின் வீட்டுவாசலுக்கே கொண்டு செல்லும் பணியில் பல்வேறு நிறுவனங்களை சார்ந்த ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருமே இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இது தவிர பணிக்கு செல்வோரும் இருசக்கர வாகனங்களையும்,நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக காற்று மாசு அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதன்படி 2024 ஆண்டு நிலவரப்படி, வளிமண்டலத்தில் 5,00,000 டன்கள் கரியமில வாயு உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உணவு விநியோகத் துறையை சார்ந்தவர்கள் மின்வாகனங்களுக்கு மாறுவதற்கான முன்னெடுப்புகள் பற்றிய நுகர்வோர் உணர்வுகள் மற்றும் கருத்துகள்’ என்ற தலைப்பில் சி எம் எஸ் ஆர் என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை விநியோகத்தில் ஈடுபட்டு வரும் அமேசான்,பிளிப்கார்ட்,ஜொமாட்டோ, ஸ்விகி போன்ற நிறுவனங்களால்,காற்று மாசு அடைவதாக 96.2% பேரும்,இதனை தடுக்க மின் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என 66.7% பதிலளித்துள்ளனர். இதில் 49.2% பேர் நகரத்தில் காற்றின் தரம் பற்றிய விழிப்புணர்வை அதிகம் பேண வேண்டும் என்றனர். இது புனேவுக்கு அடுத்தபடியாக நாட்டில் இரண்டாவது மிக உயர்ந்த விழிப்புணர்வு மதிப்பீடாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் பதிலளித்தவர்களில் 37.4% பேர்,காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து மிகவும் பயனுள்ள தகவல் என கூறியுள்ளனர்.
கோவையில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 94.2% பேர், உணவு விநியோக நிறுவனங்களின் பணியாற்றுவோர் மின்வாகனன்களுக்கு மாறுவது காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் என கூறியுள்ளனர். 64.7%பேர் மின் வாகனங்களுக்கு மாற விருப்பம் தெரிவிட்துள்ளனர். 35.8% மக்கள் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பெற்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.இவர்களில் 30.3% பேர்,காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்து மிகவும் பயனுள்ள தகவலை கூறியுள்ளனர். மற்றவர்களில் 16.6% பேர் மின் வாகனத்திற்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர், 55.3% பேர்,நிறுவனங்கள் அதன் ஊழியர்கள் மின் வாகனத்திற்கு மாறுவதை ஊக்குவிக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் மின் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் வாகனங்களை விற்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். காற்று மாசுபாடு குறித்து 6 மாநிலங்களில் உள்ள 10 நகரங்களில் மொத்தம் 3800 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.அதில் டெல்லி (380 பேர்), மும்பை (380) & புனே (380), அசன்சோல் (373) & கொல்கத்தா (371), கோயம்புத்தூர் (380) மற்றும் சென்னை (372), பெங்களூரு (372) மற்றும் ஹூப்ளி-தர்வாட் (374) மற்றும் அகமதாபாத் (370) பேர் பதிலளித்துள்ளனர் என்றார்கள்..
Leave a Reply