எலக்ட்ரிக் ஸ்கூட்டர் – வேன் மோதல் .ஒருவர் உயிரிழப்பு.

கோவை மே 16 கோவை கவுண்டம்பாளையம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் ( வயது 55)இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். வெள்ளக் கிணறு பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த வேன் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் பால்ராஜ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமலஇறந்தார்.இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாகநெல்லை மாவட்டம், நாங்குநேரிபக்கம் உள்ள களக்காட்டைச் சேர்ந்த வேன் டிரைவர் முத்துக்குமார் (வயது 27 )கைது செய்யப்பட்டார். இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.