யுஎஸ்டி கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாடாளுமன்ற கீழவையில் மொத்தமுள்ள 61 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 57 இடங்களை யுஎஸ்டிபி கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மொத்தம் 290 இடங்களில் யுஎஸ்டிபி வென்றிருப்பதாக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மூலம் அறிய முடிகிறது. மேலவை மற்றும் பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட 166 இடங்களையும் சேர்த்து யுஎஸ்டிபி வெற்றி பெற்ற இடங்களையும் கணக்கிட்டால் பெரும்பான்மைக்கு தேவையான 294 இடங்களுக்கும் மேல் அதாவது, 450 இடங்களை யுஎஸ்டிபி கைப்பற்றியிருப்பதால் மியான்மரில் யுஎஸ்டிபி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
2021-இல் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் (80) அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சி புரிந்துவரும் நிலையில், தோ்தல் வாயிலாக அதிகாரபூா்வமாக அதிபா் பொறுப்பை ஏற்க ராணுவ ஜெனரல் மின் ஆங் லயிங் தீவிரம் காட்டி வருவதால் புதிய அதிபராக மின் ஆங் லயிங் பொறுப்பேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.







