கோவை மே 28 கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா நேற்று சலிவன் வீதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா ) பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வைசியாள் வீதியைச் சேர்ந்த கருப்பையா (46 )கைது செய்யப்பட்டார் .இதே போல பீளமேடு போலீசார் அங்குள்ள கோல்டுவின்ஸ், டாஸ்கன்ட் வீதியில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அந்த கடையை நடத்தி வந்த மூதாட்டி சரஸ்வதி (வயது 72) கைது செய்யப்பட்டார்.இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
குட்கா விற்பனை செய்த மூதாட்டி – வியாபாரி கைது .
