கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள நல்லே பிள்ளி, பள்ளி மேடு,நட்டுகல் வாயா பகுதியைச் சேர்ந்தவர் சாபர் (வயது 62)கார் சீட் கவர் பொருத்தம் வேலை செய்து வந்தார்.இவர் கடந்த 15 ஆம் தேதி குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது பேரக் குழந்தைகளை பார்த்துவிட்டு நேற்று ரயில் மூலம் கோவை திரும்பினார் .கோவை மத்திய ரயில் நிலையத்தில் இறங்கியதும் அங்கிருந்து அரசு பஸ்சில் உக்கடம் செல்வதற்காக ஏறினார் .. இருக்கையில் உட்கார்ந்ததும் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. உடனே டிரைவர் பஸ்சை அரசு மருத்துவமனைக்கு திருப்பினார். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து அவரது மனைவி பல்கீஸ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.