ஸ்கூட்டர் மீது பைக் மோதி முதியவர் சாவு 2 பேர்படுகாயம்.

கோவை ஜூன் 22 கோவை சுங்கம் ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் அஸ்வின் குமார் (வயது 69) இவர் நேற்று முன்தினம் பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள பாரதி காலனி சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.தமிழ் வாணன் என்பவர் பின் சீட்டில் இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் அஸ்வின் குமார் ,தமிழ்வாணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அஸ்வின் குமார் இறந்து விட்டார். படுகாயம் அடைந்த தமிழ்வாணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்துஅஸ்வின் குமார் மனைவி கல்பனா (வயது 62) கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த மதுரை முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சபரி பாண்டி (வயது 26)மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த சபரி பாண்டிக்கும் காயம் ஏற்பட்டது.அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.