அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடந்த விழாவில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாகவும், புகழ்பெற்றதாகவும் மாற்றுவதற்கு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளேன் என்று தெரிவித்தார். இதையும் படிக்க | போலாந்து மீது விழுந்த ரஷிய ஏவுகணைகள்: இருவர் பலி ஏற்கெனவே அதிபராக இருந்த டிரம்ப் கடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். தற்போது மூன்றாவது முறையாக போட்டியிடவுள்ளார். கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபை, செனட் சபை தேர்தல் முடிவுகள் ஆளும் ஜனநாயக கட்சிக்கே சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply