தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற ஏப்ரல் 23-ம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. வருகிற 6-ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஏப்ரல் 2-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ஊர்வலமாக சென்ற உதயநிதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் சென்றனர்.

இந்நிலையில், தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, அந்த வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வேட்பு மனுவில் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில், சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.12.92 கோடி, அசையா சொத்து ரூ.7.72 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.1 கோடி மதிப்பு டிஃபெண்டர் கார், ரூ.23 லட்சம் மதிப்பு இன்னோவா கார் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
உதயநிதி திருவள்ளூரில் விவசாய நிலம் ஒன்றை வைத்துள்ளார். மேலும், வேளச்சேரியில் வேளாண்மை அல்லது பிற இடங்களை வைத்துள்ளார். ராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்புகளும் இருப்பாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், உதயநிதி கையில் ரூ.50,000 ரொக்கமாக வைத்துள்ளார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.14.56 லட்சமும், ஆக்சிஸ் வங்கியில் ரூ.8.44 லட்சமும், தேர்தல் செலவுக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சமும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும், உதயநிதி தன்னிடம் தங்கம், வெள்ளி, வைர நகைகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மனைவி கிருத்திகா பெயரில் ரூ.13.25 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், அசையா சொத்துகள் எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார். கிருத்திகாவிடம் ரூ.75,000 ரொக்கம் கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கிருத்திகாவிடம் கார், பைக் என வாகனங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மனைவியிடம் ரூ.1,87,82,720 மதிப்பில் 1600 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் வேட்பு மனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதில், மகள் இன்பன் உதயநிதி பெயரை உதயநிதி குறிப்பிடவில்லை. மகள் தன்மயா உதயநிதி பெயரை குறிப்பிட்ட அவர், இன்பன் உதயநிதி பெயரை குறிப்பிடவில்லை. இன்பன் உதயநிதி பெயரை குறிப்பிடாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.