பிளம் கேக் சாப்பிடுவது யார்? தி.மு.க-த.வெ.க போட்டி.அண்ணாமலை !

விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் அரசு பஸ்களை 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரம் பரிசோதனை செய்ய வேண்டும் – பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல் !

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம் : தி.மு.க தோற்கப் போகிறது – அண்ணாமலை

கன்னியாகுமரி அரண்மனை கிறிஸ்மஸ் விழாவில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்றதால், தி.மு.க வினர் புறக்கணித்து உள்ளனர் – அண்ணாமலை

எங்களை மத அரசியல் செய்கிறோம் என்று கூறும் மு.க ஸ்டாலின், கிறிஸ்துமஸ், ரம்ஜானுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து கூறாதது ஏன் ? – அண்ணாமலை கேள்வி !!!

கோவையில் பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது :

தமிழகத்தில் அரசு பஸ்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குகின்றனர். அரசு பஸ்சின் முன் பக்க டயர் வெடித்து கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயரிழந்து உள்ளனர். அரசு இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு பஸ்களின் நிலையை சோதனை செய்ய வேண்டும்.

அஸ்ஸாமில் கிருஸ்தவ கொண்டாட்டங்களின் போது சிலர் இடையூறு செய்து உள்ளனர். இது விரும்பத்தகாத நிகழ்வு, யார் செய்து இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடியே முன்னின்று கிருஸ்தவ மத விழாவில் பங்கேற்று உள்ளார்.

பா.ஜ.க கூட்டணி பேச்சு வார்த்தையில் நான் பங்கேற்கவில்லை. அதனால் அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.தேர்தலுக்கு மூன்று மாதம் உள்ளது. அதனால் கூட்டணிக்கு முடிவாக அதிக நாட்கள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலிமையாக தேர்தலை சந்திக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது தான் எங்கள் ஒரே நோக்கம். எல்லா தலைவர்களையும், எல்லா கட்சியினரையும் மரியாதையாக நடத்தப்படுவார்கள்.தி.மு.க தோற்கப் போகிறது என்பதால் அவர்களுக்கு பயம் உள்ளது. எஸ்.ஐ.ஆர் குறித்து தி.மு.க கூறுவது தோல்வி பயத்தால் தான்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் மத அரசியல் செய்கிறார். நாங்கள் கிருஸ்துமஸ், ரம்ஜான் வாழ்த்து கூறுகிறோம். தீபாவளி கொண்டாடுகிறோம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து கூற மாட்டார். கிருஸ்துமஸ், ரம்ஜானுக்கு முதல் ஆளாக செல்லுவார். அப்படியென்றால் யார் மத அரசியல் செய்கிறார்கள்?

தமிழக மக்கள் வெளிப்படையாக பார்த்து விட்டனர். கன்னியாகுமரி அரண்மனை கிருஸ்துமஸ் விழாவிழல் தொடர்ந்து தி.மு.க பங்கேற்கும். இந்த ஆண்டு த.வெ.க வை அழைத்ததால் தி.மு.க புறக்கணித்து உள்ளது. கிருஸ்துமஸ் கேக் யார் ? சாப்பிடுவது என்பதில் தி.மு.க விற்கும் – த.வெ.க விற்கும் சண்டை நடக்கிறது

தமிழகத்தில் பா.ஜ.க வினர் கடுமையாக உழைத்து பூத் அளவில் போட்டிபோடும் அளவிற்கு வளர்த்து உள்ளனர். பா.ஜ.கவின் வலிமை எங்களுக்கும், மற்ற கட்சிகளுக்கும் தெரியும். நமது ஒற்றை இலக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர்த்துவது தான். இன்னும் நேரம் உள்ளது யாரும் அவசரப்பட்டு பேச வேண்டியதில்லை.

தமிழக போலீஸ் துறை மிகப்பெரிய மன அழுத்தத்தில் உள்ளது. சீருடையில் உள்ளது, பாது ஒருவர் தவறு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையான பணிச் சுமையில் போலீசார் உள்ளனர். மூத்த அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதமும் முக்கியம். அதிகாரிகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். என அவர் கூறினார்.