செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை கொடூரமாக தாக்கிய திமுக நிர்வாகி.. அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்.!!

இந்த சூழ்நிலையில் டெல்லியை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஜாபர் அவர்களுடைய வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக செய்தி சேகரிக்க சென்ற இரு பத்திரிக்கையாளர்களை கொடூரமாக தாக்கியதாக திமுக கட்சியின் நிர்வாகி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த நபரின் இந்த கொடூரமான செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள மத்திய மீன்வள மற்றும் கால்நடை பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் “செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செந்தில் ஆகியோர், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளால், அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். சாமானியர் ஒருவரின் கருத்துச் சுதந்திரம் பற்றி, எதிர்க்கட்சியாக இருந்த பொழுது பக்கம் பக்கமாக பாடமெடுத்த ‘போலி திராவிட மாடல்’ அரசியல்வாதிகளே, போதைப் பொருள் கடத்துபவர்களை செய்தியாக்கச் சென்ற, செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது தான் கருத்துச் சுதந்திரமா?

கட்சிக்குள் புற்றீசல் போல் போதைப் பொருள் வியாபாரிகளை ஒளித்து வைத்திருப்பது, செய்தியாளர்களை அறைகளில் பூட்டி வைத்து தாக்குவது தான், ‘போலி திராவிட மாடல்’ அரசாங்கத்தின் புதிய கொள்கையா?
போதைப் பொருள் கடத்துபவனையும், அதை விற்று சமூகத்தை சீரழிப்பவனையும் பாதுகாக்கிறதா இந்த ‘போலி திராவிடம்?’

எல்லோருக்கும் சமமான ஆட்சி செய்வதை விடுத்து, தன்னுடைய அடியாட்களை செய்தியாளர்கள் மீது ஏவி விடுதல் தான் ‘போலி திராவிடம்’ வகுத்திருக்கும் புதிய புரட்சியா? இதுதான் தாங்கள் சொன்ன ‘விடியலா?’ இன்று கடுமையாகத் தாக்கப்பட்டுள்ள செய்தியாளர்கள் போல், தொடர்ச்சியாக செய்தியாளர்களிடமும், தவறை தட்டிக் கேட்கும் சாமானியர்களிடமும், அராஜகம் செய்து வரும் இந்த ‘போலி திராவிட மாடல்’ அரசாங்கத்தை, மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தனது பதிவில் கூறியுள்ளார்.