மதுரை அத்திகுளத்தைச் சேர்ந்தவர் எழிலரசு இவரது மகன் முகேஷ் குமார் (வயது 23) இவர் கோவை பீளமேடு சித்ரா, அழகு நகர் பகுதியில் தங்கியிருந்து கோவை மாவட்ட கருவூலத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கருவூலத்தில் வருடாந்திர கணக்குகளை சரிபார்த்த போது ரூ.15 லட்சத்து 49 ஆயிரத்து 970 கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட கருவூல அதிகாரி குமரேசன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இளநிலை உதவியாளர் முகேஷ் குமார், பென்சன்தரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக்கூடிய தொகையில் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக முகேஷ் குமார் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..
மாவட்ட கருவூலத்தில் ரூ.15 லட்சம் மோசடி – இளநிலை உதவியாளர கையாடல்..!
