கோவை மே 20 கோவை சூலூர் காடம்பாடி பக்கம் உள்ள செங்கத்துறையைச் சேர்ந்தவர் தண்டபாணி ( வயது 75)இவர் தனது மகன் பழனிச்சாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் பழனிசாமி கடந்த 16-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றிருந்தார்.அப்போது தண்டபாணி நைலான் கயிற்றை மின்விசிறியில் கட்டிதூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். .இது குறித்து சூலூர் போலீசில் பழனிச்சாமி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்லெனின் அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்.
மகனுடன் கருத்து வேறுபாடு:75 வயது முதியவர் .தூக்கு போட்டு தற்கொலை .









