சபரிமலை ஐயப்பன் கோவிலில் குவியும் பக்தர்கள் – 4 நாட்களில் 2.26 லட்சம் பேர் சாமி தரிசனம்.!!

பரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது.

மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம்போர்டு இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி இருக்கிறது. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70,000 பேர், ஸ்பாட் புக்கிங் மூலமாக 10,000 பேர் என தினமும் 80,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அது மட்டுமின்றி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதானத்தில் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நடைமுறை பக்தர்கள் நெரிசலின்றி சென்று சாமி தரிசனம் செய்வற்கு உதவியாக இருக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும் போது மட்டும் நடைப்பந்தலில் கூட்டமாக இருக்கிறது.அதன்பிறகு கூட்டம் குறைந்தது. நடைப்பந்தலில் பக்தர்கள் காத்திருக்கும் போது அவர்களுக்கு பிஸ்கட், சுக்கு தண்ணீர் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்படுகிறது.

வரும் நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் அதற்கு தகுந்தாற்போல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. அன்றைய தினம் பூஜைகள் எதுவும் நடக்காவிட்டாலும், அன்றைய தினமே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று முதல் நேற்று(18-ந்தேதி) மாலை வரையிலான 4 நாட்களில் 2.26லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.