280 ரஷ்ய வாகனங்கள் அழிப்பு.. உக்ரைனில் அமெரிக்க ஏவுகணை..!

ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் அதனை அழிக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு “எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதத்தை வழங்கி உள்ளது

உக்ரைன் மீது ரஷ்யா ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதனை எதிர்கொள்ளும் விதத்தில் நோட்டா அமைப்பு ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு உதவும் வகையில் “எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்கான் ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா இது போன்ற தோள்களில் வைத்து தாங்கும் ஆயுதங்களை ஆப்கான் புரட்சியாளர்களுக்கு வழங்கியது.

இந்த நிலையில் வான்வெளி போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை “எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ மூலம் குறிவைத்து அழிக்கும் ஆயுதம் ஆகும். சுமார் 15 கிலோ எடை கொண்டு இந்த ஆயுதங்களை பயன்படுத்தி தரைப்பகுதியில் இருந்து கொண்டு வானில் தாழ்வாக பறக்கும் எதிரி விமானங்களை அழிக்கலாம். மேலும் அதன் சென்சார் வெப்பத்தை கொண்டு வானில் பறக்கும் விமானங்களை அறிந்து கொண்ட பின் துல்லியமாக குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.

இதனை தொடர்ந்து இந்த ஆயுதம் தோளில் வைத்து உபயோகப் படுத்தும் விதத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்றரை மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆயுதம் ரெண்டு மடங்கு அதிக வேகமாக 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணிக்கும் திறன் கொண்டது. அதனை ஏவியவுடன் வீரர்கள் வேறு பகுதிக்கு உடனே சென்று தாக்குதலை தொடரலாம்.

இந்த நிலையில் ரஷ்ய ராணுவதின் 280 வாகனங்களை இந்த ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதங்களை பயன்படுத்தி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிறிய டிரோன்களையும் தாக்கும் விதத்தில் அதிநவீன வடிவத்தில் இந்த ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ உருவாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா இந்த ஆயுதங்களை இன்னும் மேம்படுத்தும் விதத்தில் ஆய்வு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.