உதயநிதி அமைச்சராக்க தீர்மானம்..? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டத்தில் நடப்பது என்ன..?

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.

குறிப்பாக, சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி தடை, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயத்தில், உதயநிதியை அமைச்சராக்குவது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.