கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்படும் ஒரு மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தில் ஜூனியர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் ஜோதிமணி (வயது 35) இவர் நேற்று நீதிமன்றத்தில் இருந்து அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை மஞ்சுஸ்வரி மற்றும் அவரது பெற்றோர்கள் சேர்ந்து மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து வழக்கறிஞர் ஜோதிமணி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.போலீசார் மஞ்சுஸ்ரீ மற்றும் அவரது பெற்றோர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் – 3 பேர் மீது வழக்கு..!
