பெண்களை இலவச பொருட்களுடன் ஒப்பிட்டு சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு..!

.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அ.தி.மு.க. கூட்டத்தில் பேசியபோது, “தேர்தலில் மிக்ஸி, கிரைண்டர் போலவே, ஒவ்வொருத்தருக்கும் ஒரு மனைவியை கூட இலவசமாக கொடுப்பார்கள்” என்று கூறி, பெண்களை இலவச பொருட்களுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த கருத்துக்கு தி.மு.க. அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சண்முகத்தின் கருத்து “பெண்களிடம் அ.தி.மு.க.வின் வக்கிரமான மனநிலையை” வெளிப்படுத்துவதாக அவர் சாடினார்.

தி.மு.க. அரசு செயல்படுத்தும் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் உள்ளிட்ட பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார். அ.தி.மு.க. தலைவர்கள் இதற்கு முன்பும் பெண்களுக்கான திட்டங்களை இழிவுபடுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் சண்முகம் இப்படி பேசியிருப்பாரா என்றும், இந்த கருத்துக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் கீதா ஜீவன் கேள்வி எழுப்பினார். பெண்கள் முன்னேற்றத்தை அ.தி.மு.க. விரும்புவதில்லை என்பதையே இத்தகைய கருத்துக்கள் காட்டுவதாகவும் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.