ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட் … ஒலிம்பிக் சங்கத்திடம் ஐசிசி பரிந்துரை..!

ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்டை இணைக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒலிம்பிக் சங்கத்திடம் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

கடந்த 1900 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டு உள்ளது. அதன் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் தொடரை இணைப்பதற்காக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இதுகுறித்து பரிந்துரைக்கபட்டுள்ளது.

வரும் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் தொடர் மீண்டும் அறிமுகம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது. எனவே அதற்கான திட்டம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் மூலம் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு பரிந்துரைக்கபட்டுள்ளது.

கடந்த1998 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் தொடர் இணைக்கப்பட்டு இருந்தது.

லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்த விளையாட்டு பட்டியலை உறுதி செய்துள்ளதாகவும் இது தொடர்பாக ஒலிம்பிக் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

அதே போல கடந்த 1900 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாடப்பட்டதும், அதில் பிரான்ஸ் ஐ இங்கிலாந்து விழ்த்தி தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது..