டிராவல்ஸ் அதிபர் கொலையில் கள்ளக்காதலி கைது.

பரபரப்பு வாக்குமூலம். கோவைமே 5தஞ்சாவூர் , புளியந்தோப்பு ஞானம் நகரைசேர்ந்தவர் சிகாமணி (வயது 48) இவர் துபாய் டிராவல்ஸ் நிறுவன நடத்தி வந்தார். இவருக்கு பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் சிகாமணிக்கு துபாயில் பணியாற்றி வந்த கோவையை சேர்ந்த சாரதா ( வயது 32) என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மேலும் அவர்களுக்குள் பணம் கொடுக்கல் – வாங்கலும் இருந்தது. இதில் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டதால் துபாயில் இருந்து சாரதா கோவைக்கு திரும்பினார் .அவரை சமாதானப்படுத்த சிகாமணி முயற்சித்தார். இதற்காக அவர் கடந்த மாதம் 21 ஆம் தேதி துபாயில் இருந்து கோவைக்கு வந்தார் .அவரை சாரதா விமான நிலையத்தில் வரவேற்று தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். முன்னதாக துபாயில் இருந்து கோவை வழியாக சொந்த ஊருக்கு வருவதாக மனைவி பிரியாவிடம் சிகாமணி கூறியிருந்தார். ஆனால் அவர் 7 நாட்கள் ஆகியும் சொந்த ஊருக்கு செல்லவில்லை. இதனால் இதுகுறித்து பிரியா கோவை பீளமேடு காவல் நிலையத்தில் கடந்த 28ஆம் தேதி புகார் செய்தார். இதற்கிடையில் கரூர் மாவட்டம் பொன்னமராவதி யை அடுத்த கே. பரமத்தியில் உள்ள காட்டுப் பகுதியில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அவர் யார்? என்று அடையாளம் தெரியாததால் அவரது உடலை அங்குள்ள சுடுகாட்டில் போலீசார் அடக்கம் செய்தனர். இந்த விவகாரம்
கோவை போலீசருக்கு தெரியவந்தது. இதனால் பிணமாக கிடந்தது சிகாமணியாக இருக்கலாம் என்று போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தூத்துக்குடி மாவட்டம் சிவகிளையைச் சேர்ந்த தியாகராஜன் ( வயது 69) என்பவர் கோவை கோர்ட்டில் சரணடைந்தார். அவருடன் நடத்திய விசாரணையில் சிகாமணியை விருந்துக்கு அழைத்து மதுவிலும் கோழிக்கறியிலும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்து உடலை கரூர் பகுதியில் வீசியதாக கூறினார் .மேலும் இந்த கொலையில் தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதி, சிகாமணியின் கள்ளக்காதலி சாரதா நிலா ( வயது 33) சுவாதி (வயது 26) கூலிப்படையை சேர்ந்தநெல்லை மாவட்டம் தச்சநல்லூர் புது குளத்தைச் சேர்ந்த புதியவன்என்ற குட்டி தங்கம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் சாரதா தவிர ஈரோடு சென்னிமலை ரோடு சுவாதி (வயது 26)கோவை அம்மன் குளம் ரோடு தியாகராஜன் ( வயது 69) கணபதி மாநகர்,எப்.சி .ஐ. காலனி கோமதி (வயது 52 )நிலா ( வயது 33 ) ஈரோடு சென்னிமலை ரோடு சுவாதி (வயது 26)ஆகிய 5பேரை போலீசார் கைது செய்தனர் தலைமறைவான . சாரதாவை வலை வீசி தேடி வந்தனர். மேலும் அவர் துபா ய்க்கு தப்பிச் செல்லாமல்இருக்க விமான நிலையங்களுக்கு “லுக் அவுட்” நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் சிகாமணி கொலை செய்யப்பட்டது கோவை காந்திமா நகர் பகுதி என்பதால் இந்த வழக்கு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. நேற்று இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி தலைமையிலான த னிப்படை போலீசார் மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த சாரதாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அந்த வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தில் துபாயில் இருந்த போது சிகாமணி தன்னை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும், அதனை தியாகராஜன் உள்ளிட்டோரிடம் தெரிவித்து அவரை பழிவாங்க திட்டமிட்டு கொலை செய்து கரூருக்கு கொண்டு சென்று உடலை வீசியதாகவும் தெரிவித்தார். தனிப்பட்ட பிரச்சனைக்காக சிகாமணி கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றும் பணம் பறிக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக சாரதாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே கைதான் 5 பேரை காவலில் அடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் சிகாமணி உடலை கொண்டு செல்ல கொலையாளிகள் பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலி கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்புஏற்படுத்தி உள்ளது.