கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி ஆணையாளரிடம் 13 நகர்மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனு ஒன்றை அளித்தனர் அதில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தில் ஊழல், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒப்பந்த பணிகளை வழங்கி அதன்மூலம் பயனடைவது, நகர்மன்ற கூட்டம் சரிவர கூட்டுவதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அதற்கு நகர் மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார் துணை போவதாகவும் ஆகவே இருவரையும் பதவி நீக்கம் செய்ய சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர் இதில் திமுக கவுன்சிலர்கள் 12 பேர்களும் அதிமுக கவுன்சிலர் ஒருவரும் ஆக மொத்தம் 13 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது
வால்பாறை நகராட்சியில் திமுக நகர் மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற ஆணையாளரிடம் கவுன்சிலர்கள் மனு.
