கோவை மே 2 கோவை மாநகராட்சியில் 1000நிரந்தர தூய்மை பணியாளர்கள், 4800 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் உள்ளனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம், தூய்மை பணியாளர்கள் சங்கம் ,தமிழ் புலிகள் தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைபோராட்டம் நடைபெற்றது இதில் நிர்வாகிகள் சந்தனகுமார் , ரங்கநாதன் ,, சுரேஷ், தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரும்பாலான தூய்மை பணியாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் பல பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டது.
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்.
