கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது .நேற்று முன்தினம் 89 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பின்னர் நேற்று கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியது. நேற்று மட்டும் புதிதாக 104 பேருக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாபாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் இல்லை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 727 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 429 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா அதிகரித்துள்ளதால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கோவையில் எஸ் .எஸ். குளம், வட்டாரத்திலுள்ள குரும்பபாளையம்,ஸ்ரீ கார்டன் முதல் தெருவில் ஒரே வீட்டில் 4 பேருக்கும், மாநகராட்சியில் ஆர்.எஸ். புரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.மேலும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் கட்டாயம்முகக் கவசம் அணிய வலியுறுத்தி வருகிறார்கள் .