தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்..? முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை.!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்கள்,செயலாளர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

கொரோனா அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து இந்த ஆலோசனை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.