தொடர் மழை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்வு..!

தமிழக – கேரளா எல்லையில் பாலக்காட்டு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவை மாநகர பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் அணையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்கிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று 42 அடியை தாண்டியது. எனவே அணையை தமிழக அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றார்கள். அணையில் இருந்து 10 கோடியே 40 லட்சம் லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது.