தொடர்ந்து அத்துமீறும் சீனா… பதிலடி கொடுக்கும் இந்தியா..!

ந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்தில் தெற்கு திபெத் என்று கூறிய பகுதியை சீனா தனக்கு சொந்தம் என தற்பொழுது கொண்டாடி வருகிறது.

ஆனால் அது உண்மையில் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து எல்லை பிரச்சினை நீடில் வருகிறது. இந்த பிரச்சனையை மேலும் நீட்டிக்கும் வகையில் அருணாச்சலப் பிரதேசத்தில் பல பகுதிகளுக்கு சீனா சமீபத்தில் தங்களுடையது என தங்களது பெயர்களை சூட்டி இருக்கிறது. இங்குள்ள இடத்திற்கு சீன பெயர் சூட்டியது சமீபத்தில் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்பொழுது மூன்றாவது முறையாக சீன இத்தகைய அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு இருக்கிறது.

சீனாவின் இந்த ஒரு அத்துமீறலை இந்தியா பன்மையாக கண்டித்து இருக்கிறது. சீனாவின் இப்படி அப்பாற்பட்ட அத்துமீறலை நிராகரிப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்பொழுது தகவல்களை வெளியிட்டு இருந்தது. குறிப்பாக அதில் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தான் தற்போது வரை இருந்து வருகிறது. எனது சீனா இத்தகைய எல்லை மீறுதல் அநாகரிக்கமானது என்று கூறி இருக்கிறது. எப்பொழுதும் இருக்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசம் விவகாரம் இந்திய சீன இடையே மீண்டும் சர்ச்சை கிளப்பு இருக்கும் ஒரு சூழ்நிலையில் அந்த மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வருகை சென்று இருந்தார். மேலும் அங்கு உள்ள ‘துடிப்பான கிராமங்கள் என்ற ஒரு திட்டத்தை’ தொடங்கி வைத்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில், சீனாவில் அத்துமீறல்களை இந்தியா எப்பொழுதும் பொறுத்துக் கொள்ளாது என்று கூறி இருக்கிறார்.