உதகையில் அதிமுக பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்..!

உதகை : அஇஅதிமுக கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னா உதகை அக்டோபர் 13  முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி ஆணைக்கிணங்க எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி  வழிகாட்டுதலின்படி உதகை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகரப்பகுதிக்கான பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில் மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவன் முன்னிலையில் உதகை நகரக் கழகத்தின் செயலாளர் சண்முகம் ஏற்பாட்டில், சிறப்பு பயிற்சியாளராக கோவை புறநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டு உதகை ஒய்பிஏ திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம் பாபு, பொதுக்குழு உறுப்பினர் tkd தேவராஜ், மீனவர் அணி மாவட்ட செயலாளர் விஷாந்த், பேரூராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் உதகை நகர கழகப் பொறுப்பாளர்களும், கிளைக் கழகச் செயலாளர், பூத் பொறுப்பாளர்களும், மாவட்ட நகர பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் அணியினர், ர. விஜய்  உதகை தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் கழகத் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.