கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நூலகத்துடன் பார்வையாளர் அறை- இன்று திறந்து வைத்தார் கமிஷனர் பாலகிருஷ்ண.!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு காவல்துறையில் போக்குவரத்து சீரமைப்பு,போதை பொருள் ஒழிப்பு,ரவுடிகள் அட்டகாசம் அறவே இல்லாது ஒழிப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க பொது மக்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு இதற்கு முன் முதல் தளத்தில் இருக்கைகள் போடப்பட்டிருந்தது.இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களுக்கும்,போலீஸ் கமிஷனரை பார்க்க வரும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையூறாக இருந்தது.இதனால் தரைத்தளத்தில் வரவேற்பு அறை அருகே புதிதாக பார்வையாளர்கள் அறை அமைக்க போலீஸ் கமிஷனர் திட்டமிட்டார்.அதற்கான பணிகள் முடிவடைந்து இன்று திறப்பு விழா நடக்க உள்ளது.இந்த அறையில்30 பார்வையாளர்களுக்கு மேல் தாராளமாக இருக்கலாம். இந்த அறை முற்றிலும் குளு’குளு வசதி செய்யப்பட்டுள்ளது.தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது..பார்வையாளர்கள் படிப்பதற்கு அந்த அறைக்குள் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் அங்குள்ள திறந்த பீரோக்களில் காவல்துறையின் சார்பில் வாங்கப்பட்ட வெற்றி கேடயங்கள்,வெற்றி கோப்பைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.இந்தப் பார்வையாளர் அறையைபோலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.விழாவில் துணை போலீஸ் கமிஷனர்கள் சண்முகம், சந்தீஷ், சுபாஷினி.ஆகியோர் கலந்து கொண்டனர்..