கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து லேப்டாப் ‘செல்போன் கொள்ளை..!

நெல்லை மாவட்டம் முக்கூடல்,வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் இவரது மகன் தினேஷ் கார்த்திக் ( வயது 22 )இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ. 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.அங்குள்ள குளத்துப்பாளையம், சரவணா நகரில் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். சம்பவத்தன்று தினேஷ் கார்த்திக் பாத்ரூம் சென்றிருந்தார் .அவரது நண்பர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது யாரோ அறைக்குள் புகுந்து அங்கிருந்த செல்போன் 2 லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.. இது குறித்து தினேஷ் கார்த்திக் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.