ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் தின மாநாட்டில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தீர்மானம்கோவை மே 5 தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் 42 -வது வியாபாரிகள் தின மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.சி. அரங்கத்தில் இன்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை தலைவர் எஸ். எம் .பி. முருகன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பி.உதயகுமார் பொருளாளர் ஐ.சிலுவை முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநாட்டில்கோவை நாடார் சங்கத் தலைவர் டாக்டர் ஆர். பாஸ்கரன் ,முன்னாள்காவல் கண்காணிப்பாளர்வி. ரத்னசபாபதி,முத்தூஸ் மருத்துவமனை சேர்மன் டாக்டர் முத்து சரவணகுமார்,கிருபா மருத்துவமனை சேர்மன் டாக்டர் பி. டென்னிஸ் கோயில் பிள்ளை, சம்மே ளன கவுரவஆலோசகர்கள் ஆர்.பி .கருணாகரன், எஸ். குமார்,தொழிலதிபர் ஆர் பொன்னுசாமி, ஜி.எட்வின்,கடைவீதி கிளை தலைவர் கே.எல். மணி. காந்திபுரம் பகுதி கிளை தலைவர் தீனதயாளன்,வழக்கறிஞர்கள் வேல்முருகன், விமல் ராகவன். ஆறுமுகம், சிவக்குமார், சம்மேளன
தலைமை நிர்வாகிகள் பூரண சந்திரன், ஜேக்கப் தேவராஜ். சக்திவேல், சாகுல் அமீது, சுடலைமணி ,பால்ராஜ் சூலூர் ஏ. குணசிங், பாலகிருஷ்ணன்மற்றும் பலர் கலந்து கொண்டனர்., மாநாட்டில்ஏழைகளுக்கு ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் தங்களது வாகனங்களில் ரங்கே கவுடர் வீதி, தியாகி குமரன் மார்க்கெட் பகுதிக்கு சாமான்கள் கொள்முதல் செய்ய தினமும் செல்கிறார்கள்.இவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை.மேலும் அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது இதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.கூடுதல் பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைமொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் இடத்திலே தடுத்து நிறுத்த வேண்டும்.தொண்டாமுத்தூரில் விதவைப் பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்ததாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரது கடை சீல் வைக்கப்பட்டதால் அந்த பெண்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபசம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது:கடைக்கு சீல் வைப்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கைவிட வேண்டும்.புகையிலைப் பொருட்கள் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் கடைக்குள் புகுந்து வியாபாரிகளையும்,பெண்களையும் ஒருமையில் மரியாதை குறைவாக பேசி மன உளைச்சலுக்கு ஏற்படுத்துகிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும். ,கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சர்வீஸ் சேவை தொடங்க வேண்டும் ,பாதுகாப்பு நலன் கருதியும் காவல்துறையின் அறிவுரையின்படியும் வியாபாரிகள் தங்கள் வியாபார நிறுவனங்களுக்கு முன் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது போல் நலிந்த வியாபாரிகள் நலன் கருதி அரசு பஸ்களில் பயணம் செய்து சாமான்கள் கொள்முதல் செய்து வர இலவச பேருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச. எஸ். காலனி, பாலம் கட்டுமான பணியை துரிதப்படுத்த வேண்டும். தினமும் அதிகாலையில் இருசக்கர வாகனங்களில் மார்க்கெட்டுக்கு சாமான்கள் வாங்க செல்லும் வியாபாரிகளிடம் போக்குவரத்து போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.இருசக்கர வாகனங்களில் செல்பவரிடம் “ஓவர் லோடு “போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குகள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து கடைகளிலும் அரசு உத்தரவுபடி தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ,தங்கள் கடைப்பகுதியில் ரவுடிகளோ? சமூக விரோதிகளோ? சந்தேகப்படும்படி வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும்ஆண்டுக்கு 2 தடவைவியாபாரிகள் சங்க தலைவர்கள் – நிர்வாகிகளை அழைத்து கலந்துரையாடி அவர்களதுகுறைகளையும் ,கருத்துக்களையும் கேட்க வேண்டும். கடைகளில் மாமுல் கேட்டு மிரட்டும் ரவுடிகளை அடையாளம் கண்டு காவல்துறைக்கு அடையாளம் காட்ட வேண்டும். ,போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். வீதி, வீதியாக நடத்தப்படும் வார சந்தையை தடுக்க வேண்டும்.. வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்து வரும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும்.ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாநாட்டை யொட்டி 20 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டதுவியாபாரிகள் தின மாநாட்டை யொட்டி இன்று கோவை மாவட்டத்தில் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.
கோவை -தூத்துக்குடி விமான போக்குவரத்து தொடங்க வேண்டும்.
