கோவை ரயில் நிலையம்: ரயில்வே கமிட்டி தலைவர் உள்பட 16 பேர் கொண்ட எம்.பி க்கள் குழு ஆய்வு

கோவை ரயில் நிலையம்: ரயில்வே கமிட்டி தலைவர் உள்பட 16 பேர் கொண்ட எம்.பி க்கள் குழு ஆய்வு

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி தலைவர் ராதா மோகன் சிங் அவர்கள் தலைமையில் 16 பேர் கொண்ட எம்.பி க்கள் குழு ஆய்வு செய்தது. “ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட்” திட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் கைத்தறி ஆடைகள் கடையை பார்வையிட்ட இக்குழு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது.

இந்த ஆய்வைக் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்

இதை தொடர்ந்து மத்திய தேர்தல் குழு உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர்களை சந்தித்தார்:-

ரயில்வே ஸ்டாண்டிங் கமிட்டி தலைவர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
பிரதம மந்திரியின் திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என ஆய்வு செய்தனர்..
இந்த குழுவில் தமிழகம் எம் பி டி ஆர் பாலு உள்ளார். ஆனால் அவரை நாங்கள் இந்த ஆய்வில் பார்க்கவில்லை
இந்த ஆய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம் பி இருந்தால், வசதியாக இருந்திருக்கும்.
அவர் வராதது ஏமாற்றமாக உள்ளது. மேலும்
தென் தமிழகத்திற்கு கோவையில் இருந்து ரயில்வே சேவைகள் துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். குறிப்பாக கோவையை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர் என தெரிவித்தார் .

இந்த ஆய்வைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் (Ex-MP),  கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.