கோவை தனியார் கல்லூரி விடுதி அருகே மரத்தில் பிணமாக தொங்கியபடி அடையாளம் தெரியாத இளம்பெண்-போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை..!

கோவை ரேஸ்கோர்சில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் மாணவிகள் விடுதி உள்ளது. விடுதி அருகே வளாகத்துக்கு வெளியே உள்ள வேப்பமரத்தில் 35 வயது மதிக்கதக்க இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதனை பார்த்து மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் யார் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.