கோவை – லோக்மன்யா திலக் ரயிலில் சொகுசு வசதிகளுடன் கூடிய பெட்டிகள் இணைப்பு..!

கோவை – லோக்மன்யா திலக் இடையே இயக்கப்படும் ரயிலில் ( லிங்க் ஹாப்மேன் புஷ் (எல்.ஹெச்.பி.) எனப்படும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை – லோக்மன்யா திலக் (எண்: 11014), லோக்மன்யா திலக் – கோவை (எண்:11013) வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில், சாதாரணப் பெட்டிகளுக்கு பதிலாக முற்றிலும் மெட்டலால் ஆன நவீன பாதுகாப்பு அம்சங்கள், சொகுசு வசதிகளுடன் கூடிய எல்.ஹெச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.