கோவை:கோவை மாநகராட்சியின் புதிய துணை மேயராக பதவியேற்ற வெற்றிச்செல்வன், தனது தாயை துணை மேயர் இருக்கையில் அமர வைத்து, அழகு பார்த்தார்.கோவை மாநகராட்சி பிரதான அலுவலகமான விக்டோரியா ஹாலில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., மேயர் வேட்பாளரான கல்பனாவும், துணை மேயர் வேட்பாளரான வெற்றிச்செல்வனும் போட்டியின்றி, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.கமிஷனர் ராஜகோபால் இருவருக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கினார். இந்நிலையில், மதியம் துணை மேயராக பதவியேற்ற வெற்றிச்செல்வனுக்கு, வாழ்த்துக்கூற அனைவரும் வரிசையாக சென்றனர். அப்போது, அங்கு வந்த தனது தாய் வெங்கிட்டம்மாளை, துணை மேயர் நாற்காலியில் அமர வைத்து, வெற்றிச்செல்வன் அழகு பார்த்தார். இந்நிகழ்வு, காண்போரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வெங்கிட்டம்மாள், 1971ம் ஆண்டில் பேரூராட்சி கவுன்சிலராக இருந்தது குறிப்பிடத்தக்கது..