கோவை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் அசன பண்டிகை விழா -25 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து.!!

கோவை திருச்சி ரோட்டில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் .இந்த ஆண்டு 27-வது ஆண்டு பிரதிஷ்டை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆராதனைகூட்டம் நடந்தது இதனை தொடர்ந்து நேற்று அசனபண்டிகை நடைபெற்றது. இதனை கோவை – சேலம் மறை மாவட்ட பேராயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தொடங்கி வைத்தார். மொத்தம் 25 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது .ஆட்டு இறைச்சி குழம்பு, சாம்பார், அவியல், ரசம் பாயாசம் ஆகியவற்றுடன் விருந்து அளிக்கப்பட்டது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 100 க்கு மேற்பட்ட சமையல் கலைஞர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 6 டன் அரிசி, 3 ஆயிரம்கிலோ ஆட்டு இறைச்சி பயன்படுத்தப்பட்டது. காலை 10 – 30மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது .ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் பிரமாண்டமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதையொட்டி .கோவையில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களுக்கும், காப்பகங்களுக்கும் உணவு அனுப்பி வைக்கப்பட்டது.வீட்டுக்கு எடுத்துச் செல்ல கூப்பன் வாங்கியவர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்களில் உணவும் வழங்கப்பட்டது.உணவு பரிமாறுவதில் ஏராளமான ஆண்களும் ,பெண்களும் இடம்பெற்று இருந்தனர்.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்,துணை கமிஷனர் தேவநாதன் ஆகியோர் உத்தரவின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையிலபலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இதில் ஆலய தலைவர் பாதிரியார் ராஜேந்திர குமார், செயலாளர் ஜெ. பி ஜேக்கப், பொருளாளர் ஜெ.ஏ. பரமானந்தம்,அசனக் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆல்வின் ,உதவி பாதிரியார்கள் சுரேஷ்குமார், சற்குணம்.மற்றும் போதக சேகர குழு உறுப்பினர்கள் ஆடம் அப்பாத்துரை, அருண் ஆனந்தராஜ், அதிசயராஜ்,காட்வின், எஸ்.என்..ஜேக்கப், ஜாண் , ராஜா ,கிறிஸ்டி செல்வன் , பெனிட்டா , மிஸ்பா , பிரேம் மற்றும் போதகசேகர குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.