கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 6 பேருக்கு 4 ஆண்டு சிறை -கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை மாநகர குற்றப்புலனாய்வு துறையின் கள்ள நோட்டு தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6-7 – 20 14 அன்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் மொத்தம் 6பேர் இருந்தனர். அவ ர்களிடம் கத்தை, கத்தையாக 100 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது. உடனே போலீசார் சந்தேகத்தின் பெயரில் அந்த ரூபாய் நோட்டுக்களை சோதனை செய்தனர். அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது .இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர் இதில் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் (வயது 50) ஈரோட்டைச் சேர்ந்த ஜெயராஜ் ( வயது 70) கோவை தெலுங்கு பாளையம் ராமானுஜம் (வயது 47) சேலம் சி. சுதாகர் ( வயது 36) காளிதாசன் ( வயது 31) சத்யராஜ் (வயது 37) என்பது தெரியவந்தது அவர்கள் கள்ள நோட்டு அச்சடித்து காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது உடனே அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 2-வது சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனலட்சுமி கள்ள நோட்டு வழக்கில் ஏ. சுதாகர் ,ஜெயராஜ் ராமானுஜம் , சி .சுதாகர் காளிதாசன், சத்யராஜ் ஆகிய 6 பேருக்கும் தலா 4ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் .மேலும் ஏ சுதாகர் ,ஜெயராஜ் ராமானுஜம் சி சுதாகர் ஆகிய 4 பேருக்கும் தலா ரூ. 8000 அபராத மும ,காளிதாசன் சத்யராஜ் ஆகியோருக்கு தலா ரூ. 6 ஆயிரம்அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் நேற்று ஆஜராகாமல் ஏ சுதாகர் தலைமறைவாகிவிட்டார் .அவரை போலீசார் தேடி வருகிறார்கள். மீதமுள்ள 5 பேரையும் போலீசார்சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.