கோவை மாநகராட்சி சுகாதார சூப்பர்வைசர் – தூய்மை பணியாளர் மோதல் – 2 பேர் மீது போலீசார் வழக்கு..!

கோவை போத்தனூர் செட்டிபாளையம் எம்.ஜி.ஆர் . சேர்ந்தவர் சிலம்பரசன் ( வயது 32 ) இவர் கோவை மாநகராட்சி 85 -வது வார்டில் சானிட்டரி சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். பணியின் நிமித்தமாக இவர் மாநகராட்சியில் 84 வது வார்டு தூய்மை பணியாளராக வேலை பார்த்து வரும் கோவைபுதூர் சமத்துவ நகரை சேர்ந்த சாமுவேல் ( வயது 34) என்பவரை கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் சூப்பர்வைசர் சிலம்பரசனை தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் தாக்கினாராம் . இது குறித்து சிலம்பரசன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில் தூய்மை பணியாளர் சாமுவேல் போத்தனூர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் தன்னை சூப்பர்வைசர் சிலம்பரசன் பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் ரவி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.