கோவை மாவட்டம் சூலூர் பக்கமுள்ள வதம்பச்சேரியில் கைத்தறி கூட்டுறவு சங்கம் உள்ளது. சூலூர் ,பல்லடம், வதம்பச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவாளர்கள் சேலை – வேட்டி உள்ளிட்ட ரகங்களை சப்ளை செய்வார்கள். உற்பத்தி செய்து சப்ளை செய்த துணிகளுக்கு தகுந்தவாறு அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்கப்படும். வதம்பச்சேரி கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக சவுண்டப்பன் (வயது 54 )என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த சங்கத்தில் 700 க்கு மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர் .மேலாளர் சவுண்டப்பன் அரசிடமிருந்துநெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகையை பெற்று கோவை, மதுரை, திருச்சி, காஞ்சிபுரம், மாவட்டங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்கு வழங்குவதற்கு லஞ்சம் கேட்டுள்ளார். இதன்படி கைத்தறி நெசவாளர்கள் தங்களுக்கு அரசின் ஊக்க தொகை கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்க மேலாளர் சவுண்டப்பனிடம் லஞ்சப் பணம் கொடுத்துள்ளனர். பலரிடமிருந்து மொத்தம் ரூ15 லட்சத்து 89 ஆயிரத்து 950 வசூலானது. அந்தத் தொகையை மேலாளர் சவுண்டப்பன் தனது அலுவலக மேஜை டிராயரில் வைத்துள்ளார். இந்த நிலையில் நெசவாளர்களிடமிருந்து இடமிருந்து லஞ்ச பணம் வசூலித்தது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் துணை சூப்ரண்டு திவ்யாவுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை 4 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூடுதல் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் வதம்பச்சேரி கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சவுண்டப்பன் அலுவலகத்திலிருந்து கத்தை கத்தையாக லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சவுண்டப்பனை பிடித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கணக்கில் வராத லஞ்ச பணத்தை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்ச கணக்கில் லஞ்ச பணத்துடன் கூட்டுறவு சங்க மேலாளர் சிக்கியி ருப்பது கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
ரூ.15.75 லட்சம் லஞ்ச பணத்துடன் கோவை கூட்டுறவு சங்க மேலாளர் கைது..!








