சேலம் மாவட்டம் வீரபாண்டி இந்தியன் வங்கிக் கிளையில் கடந்த 2010 ஆண்டு உயிரி உரங்கள் தயாரிக்கும் சன் பயோமினியூர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.65 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் இந்த வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில் அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் சக்திவேல், மற்றும் விஜயகுமாரி ஆகியோர் விதிகளை மீறி கடன் வாங்கி மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்த நிலையில் இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
அதே போல கடன் வழங்கி நஷ்டத்தை ஏற்படுத்திய இந்தியன் வங்கி வீரபாண்டி கிளை மேலாளர் பாலசுப்பிரமணியனும் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
Leave a Reply