கோவை மே 7
கோவை அருகே உள்ள காளப்பட்டி, அசோக் நகரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோவில் பாளையம் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாகபீளமேடுகாந்தி மாநகரை சேர்ந்த பிரபு (வயது 39)தமிழ்ச்செல்வன் ( வயது 30) பட்டாளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அய்யாக் கண்ணு (வயது 65) )பீமன் என்றதேவராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்டுத்தப்பட்டசேவலும், ரூ 2500பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.