தைவானை குறி வைக்கும் சீனா… மேற்கு உலகம் அஞ்சியது போலவே போர் சூழும் அபாயம்..!!

பெய்ஜிங்: தைவான் – உக்ரைன் இடையில் எதிர்பார்த்தபடியே போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி தைவான் சென்ற நிலையில், தைவானுக்கு சீனா தனது போர் விமானங்களை அனுப்பி உள்ளது.

21 சீன போர் விமானங்கள் தைவானை சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன.

தைவானை அமெரிக்கா தனி நாடாக அங்கீகரிக்க கூடாது. நான்சி பெலுச்சியின் இந்த வருகை வரம்பு மீறியது. அவரின் செயல் தைவானை தனி நாடாக கருதுவது போல ஆகிவிடும். அவர் நெருப்புடன் விளையாடுகிறார் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று சீனா எச்சரித்து உள்ளது.

வரலாற்று ரீதியாக தைவானை அமெரிக்கா தனி நாடாக வெளிப்படையாக அங்கீகரித்தது கிடையாது. சில தலைவர்கள் அவ்வப்போது தைவானுக்கு ஆதரவாக பேசினாலும். எப்போதும் ஒற்றை சீனா என்ற நிலைப்பாட்டில் மட்டுமே அமெரிக்கா இருந்துள்ளது.

தைவானில் அத்துமீறி சீனா போர் தொடுத்தால் வேண்டுமென்றால் தைவானுக்கு ஆதாரவாக இருப்போம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஏன் தைவானுக்கு அமெரிக்கா ஆயுத உதவியும், வெடிபொருள் உதவியும் கூட செய்து வருகிறது. இருப்பினும் “ஒற்றை சீனா” என்ற கோஷத்தை அமெரிக்கா ஆதரித்து வருகிறது.

அதாவது தைவானை இன்னும் அதிகாரபூர்வமாக அமெரிக்கா தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. சரி தைவான் – சீனா மோதலுக்கு என்ன காரணம்? உக்ரைன் விவாகரத்திற்கு இதற்கும் என்ன தொடர்பு? வாருங்கள் பார்க்கலாம்!

சீனாவிற்கு அருகே தென் சீன கடல் பகுதியில் இருக்கும் தைவானை சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த தைவான் என்பது வரலாற்று ரீதியாக சீனாவுடன் தொடர்பு கொண்டது. சீனாவில் இருந்த பல்வேறு இனக்குழுக்கள் தைவானில் குடியேறி வாழ்ந்து வந்தன. வரலாற்று முறைப்படி தற்போது தைவானில் இருப்பது சீன முன்னோர்கள்தான். அங்கு இருக்கும் மக்கள் ஆஸ்ட்ரோனிஷியன் பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் சீனாவில் இருந்து தைவானில் குடியேறியவர்கள்.

இப்படிப்பட்ட தைவான் AD239 ஆண்டு வரை சீனாவின் கட்டுப்பாட்டிலும், பின்னர் டச்சு அரசு கட்டுப்பாட்டிலும். பின்னர் மீண்டும் 1683 to 1895 வரை சீனா கட்டுப்பாட்டிலும் வந்தது. பின்னர் தைவான் சீனா – ஜப்பான் போரின் முடிவில் ஜப்பான் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தைவான் மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டிற்கும் சென்றது. அப்போது தைவானை சீனா ஜப்பானிடம் இருந்து மீண்டும் கைப்பற்ற உதவியாக இருந்ததே அமெரிக்காதான் என்பது வேறு கதை.

இதன் பின் சீனாவில் 1949ல் ஏற்பட்ட உள்நாட்டு போர் அனைத்தையும் மாற்றியது. சீனாவை நிர்வகித்து வந்த சியாங் கேசிங்கிற்கு எதிராக மாவோ சார்பாக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அது உள்நாட்டு போராக வெடித்தது. இந்த போரில் மாவோ வெற்றிபெற்று சீனாவில் ஆட்சிக்கு வந்தார். தோல்வி அடைந்த அதிபர் சியாங் கேசிங் தைவானுக்கு தப்பி ஓடி அங்கு தனி நிர்வாகம் நடத்தி வந்தார். இவர் தைவானில் இருந்து கொண்டு.. நாங்கள்தான் உண்மையான சீனா என்று கூறினார். சீனாவில் இருக்கும் அரசு பொய்யானது என்று கூறினார்.

முதலில் பல நாடுகள் தைவானில் இருக்கும் அரசை உண்மையான சீன அரசு என்று அங்கீகரித்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல சீனாவை தனி நாடாக உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு, பெய்ஜிங் உடன் வர்த்தகம் தொடங்கின. இதையடுத்து தைவான் போக போக நாங்கள்தான் உண்மையான சீனா என்று சொல்வதை விடுத்து.. நாங்கள் தனி நாடு. நாங்கள் தைவான் என்று சொல்ல தொடங்கியது. இதுதான் தைவான் – சீனா மோதல் கதை. ஆனால் தைவான் ஐநா விதிப்படி இன்னும் தனி நாடு ஆகவில்லை. அமெரிக்காவும் இதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

தைவான் தனி நாடு கிடையாது. தைவான் எங்களுக்கு சொந்தம் என்று சீனா கூறி வருகிறது. ஆனால் இதை தைவான் எப்போதும் ஏற்றுக்கொண்டது இல்லை. சீனாவின் கீழ் நாங்கள் வரவில்லை. நாங்கள் எப்போதும் சுதந்திரமான தனி நாடு என்று தைவான் கூறி வருகிறது.தைவானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது உக்ரைனில் ரஷ்யா படையெடுத்துள்ளது. இதில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும் ரஷ்யாவிற்கு எதிராக வேறு பெரிய நடவடிக்கை எதையும் மேற்கு உலகம் செய்ய முடியவில்லை.உக்ரைன் போர்.

இதை பயன்படுத்திக்கொண்டு ரஷ்யாவை போலவே சீனாவும் தைவான் மீது படையெடுக்கும் என்று மேற்கு உலகமே அஞ்சியது. உக்ரைனுக்கு எப்படி ரஷ்யாவோ அப்படித்தான் தைவானுக்கு சீனா. உக்ரைன் – ரஷ்யா இரண்டும் சோவியத் யூனியன் காலத்தில் ஒன்றாக இருந்த நாடுகள். சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனி நாடாக பிரிந்தது. இந்த நிலையில் சமீப நாட்களில் நேட்டோ உடனும், ஐரோப்பா உடனும் உக்ரைன் நெருக்கம் காட்டி வந்ததால் பாதுகாப்பு கருதி ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தி உள்ளது. இதே விவகாரம்தான் தைவானிலும் நடந்து வருகிறது.

தைவான் தனி நாடாக மாறினால் அது சீனாவிற்கு பாதுகாப்பு ரீதியாக சிக்கல். உக்ரைன் நேட்டோவில் சேர்வது ரஷ்யாவிற்கு எப்படி சிக்கலோ அப்படித்தான் தைவான் தனி நாடாக மாறினால் சீனாவிற்கும் சிக்கல். ஏற்கனவே கடந்த பல மாதங்களாக தைவான் வான் எல்லைக்குள் தொடர்ந்து சீன போர் விமானங்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது உக்ரைன் போர் காரணமாக சீனா இன்னும் நம்பிக்கையுடன் தைவானை மொத்தமாக கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறது.

இதில் அமெரிக்கா இரண்டு விதமான நிலைப்பாட்டை எடுத்து உள்ளது. வரலாற்று ரீதியாக தைவானை அமெரிக்கா தனி நாடாக வெளிப்படையாக அங்கீகரித்தது கிடையாது. சில தலைவர்கள் அவ்வப்போது தைவானுக்கு ஆதரவாக பேசினாலும். எப்போதும் ஒற்றை சீனா என்ற நிலைப்பாட்டில் மட்டுமே அமெரிக்கா இருந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தைவானில், சில மாதங்களுக்கு முன் பேசும் போது, தைவானை அமெரிக்கா தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார்.