கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வால்பாறை டவுன் பகுதியில் உள்ள உண்டுஉறைவிட பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ்.அழகு சுந்தரவள்ளி செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் தினம் குறித்து சிறப்புரை ஆற்றி அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களுக்கு குழந்தைகள் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார் . இவ்விழாவில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் ரகுராம், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமார், சுகாதார ஆய்வாளர் வீரபாகு மற்றும் நகராட்சி அலுவலகப் பணியாளர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..