வீட்டு நாய் கடித்ததால்குழந்தை படுகாயம் பெண் கைது.

2 பேருக்கு சம்மன். கோவை மே 6 கோவை புலியகுளம் அம்மன் குளம்,புது அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் பொன்வேல் (வயது 33) இவருக்கு ஒரு மகளும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.இவர்களது பக்கத்து வீட்டு வசிப்பவர் கண்ணன். இவரது மனைவி சவுமியா ( வயது 50)இவர்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாமல் 5 நாய்கள் வளர்த்து வருகிறார்கள் .இந்த நாய்கள் அதே பகுதியில் உள்ள பல குழந்தைகளை கடித்துள்ளது. .இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த பொன்வேலின் மகள் மேகலாவை அந்த நாய் கடித்தது. இதில்குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.. இது தொடர்பாக சவுமியா விடம் பொன்வேல் கேட்டார் .அதற்கு அவரும், மகன்களான சூர்யா, சந்திர பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசிமிரட்டல் விடுத்தார்களாம் .இது குறித்து ராமநாதபுரம் போலீசில் பொன்வேல் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து சவுமியாவை கைது செய்தார் .. இவரதுமகன்கள் சூர்யா ( வயது 23) சாந்தாராம் பிரகாஷ் ( வயது 21) ஆகியோருக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது.